பொக்லைன் எந்திரத்தில் சிக்கி மின் ஊழியர் பலி
சின்னசேலம் அருகே பரிதாபம்
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பாலாம்பிகை நகரில் வசித்து வருபவர் ராமலிங்கம் (வயது 56). மின்வாரிய ஊழியரான இவர் தனது வீட்டின் முன்பு கொட்டப்பட்டிருந்த கற்களை பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். பொக்லைன் எந்திரத்தை சின்னசேலத்தை சேர்ந்த பிரவீன்(19) என்பவர் இயக்கினார். அந்த சமயத்தில் ராமலிங்கம் பொக்லைன் எந்திரத்தின் பின்புறமாக கற்களை சமன் செய்து கொண்டிருந்தார். இதை கவனிக்காத பிரவீன் பொக்லைன் எந்திரத்தை பின்புறமாக இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திர சக்கரத்தில் சிக்கி ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story