நாகையில் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்


நாகையில் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 10 Sept 2021 11:17 PM IST (Updated: 10 Sept 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகையில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். விநாயகர் சிலைகள் ரூ.40 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது.

நாகப்பட்டினம்;
விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகையில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். விநாயகர் சிலைகள் ரூ.40 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. 
விநாயகர் சதுர்த்தி
நாகையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படவில்லை. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகை கடைத் தெருவில் பூஜை பொருட்கள் மற்றும் பூக்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் பூக்கள் விற்பனை நேற்று அதிகமாக இருந்தது. இதைப்போல அலங்கார பொருட்களின் விற்பனையும் அதிக அளவு நடைபெற்றது. 
பூஜை பொருட்கள்
மேலும் வாழை இலை, அருகம்புல், அவல், பொரி, கடலை, வெள்ளம், வெற்றிலை, பாக்கு, பழம் போன்ற பூஜை பொருட்களை வாங்க நாகை கடைத்தெருவில் ஏராளமான மக்கள் குவிந்தனர். மேலும் நாகை, நகரில் உள்ள பழக்கடைகளில் பழங்கள் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. நாகை நீலா வீதி், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட முக்கியமான பல வீதிகளில் பலரும் பூஜை பொருட்கள் மற்றும் மாலைகள் என பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மக்கள் வாங்கி சென்றனர்.
சிலைகள் வாங்க ஆர்வம்
வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்காக விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நேற்று ஆர்வமாக வாங்கி சென்றனர். நாகை. கடைத்தெரு உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் வியாபாரிகள் பலரும் விநாயகர் சிலைகளை விற்பனைக்காக வைத்திருந்தனர். சிலைகள் ரூ. 40 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான விநாயகர் சிலைகளை வீடுகளுக்கு வாங்கி சென்றனர். 

Next Story