மாவட்ட செய்திகள்

வீட்டு சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி + "||" + The wall of the house collapsed and killed the worker

வீட்டு சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

வீட்டு சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
வீட்டு சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 40). திருமணம் ஆகவில்லை. அதே பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று காலை அக்கம்பக்கத்தினர் பார்த்த போது மணியன் வீடு இடிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இடிந்து விழுந்த சுவற்றை அகற்றி பார்த்தபோது இடிபாட்டில் சிக்கி மணி தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.