விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக் கோரி மறியல்
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக் கோரி மறியல்
குடியாத்தம்
குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க கோரியும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும், பொது இடங்களில் வைத்த சிலைகளை பறிமுதல் செய்ததை கண்டித்தும், பறிமுதல் செய்த விநாயகர் சிலைகளை வழங்கக்கோரியும் இந்து முன்னணியினர் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று மதியம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர்கள் சாய் ஆனந்தன், பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, கணபதி, கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்து குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தின் அருகே தங்க வைத்தனர்.
அப்போது இந்து முன்னணி குடியாத்தம் நகர துணைத்தலைவர் கார்த்தி (30) என்பவர் மயக்கமடைந்தார். அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தட்டப்பாறை பகுதியில் விநாயகர் சிலையை வைக்கமுயன்ற போது தடுத்த காவல் துறையினரை கண்டித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டி. கே.தரணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story