மாவட்ட செய்திகள்

டிப்பர் லாரி மோதி முதியவர் பலி + "||" + truck collision kills

டிப்பர் லாரி மோதி முதியவர் பலி

டிப்பர் லாரி மோதி முதியவர் பலி
டிப்பர் லாரி மோதி முதியவர் பலியானார்.
திருமயம்,
திருமயம் அருகே உள்ள பன்னீர் பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 75). இவர் நேற்று ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது லெம்பலகுடி பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற சின்னத்தம்பி மீது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.