குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி


குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால்  வெட்டி கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 10 Sep 2021 7:58 PM GMT (Updated: 2021-09-11T01:28:52+05:30)

ஒரத்தநாடு அருகே குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
குடும்பத்தகராறு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது52). இவரது மனைவி குமுதவள்ளி (39).  இவர்கள் இருவரும் கண்ணந்தங்குடி மேலையூர் ஊரச்சியில் உள்ள குமுதவள்ளியின் தாயார் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்களும்,  1 மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. 
இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை செய்து வந்த கண்ணன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இதன் பிறகு கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை கண்ணனுக்கும், குமுதவள்ளிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கண்ணன் அரிவாளால் குமுதவள்ளியின் முகத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் குமுதவள்ளி கீழே சாய்ந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குமுதவள்ளியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குமுதவள்ளியின் மகன் சந்தோஷ் (20) கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story