மாணவர் விடுதி வார்டன் விஷம் குடித்து சாவு


மாணவர் விடுதி வார்டன் விஷம் குடித்து சாவு
x
தினத்தந்தி 10 Sep 2021 8:04 PM GMT (Updated: 2021-09-11T01:34:06+05:30)

மார்த்தாண்டம் அருகே மாணவர் விடுதி வார்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குழித்துறை, 
மார்த்தாண்டம் அருகே மாணவர் விடுதி வார்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விடுதி வார்டன்
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி ஐக்கிரவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 53). இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவருக்கான அரசு விடுதியில் வார்டனாக வேலை பார்த்து வந்தார்.
கிறிஸ்டோபருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் மது போதையில் வருவது வழக்கம்.
 தற்கொலை
சம்பவத்தன்று இரவில் கிறிஸ்டோபர் வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். பின்னர், இதுபற்றி மனைவி பிந்துவிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அந்த அவர், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிறிஸ்டோபர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கிறிஸ்டோபரின் மனைவி பிந்து கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story