மணல் திருடிய வாலிபர் கைது


மணல் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Sept 2021 1:39 AM IST (Updated: 11 Sept 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனத்தில் மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம், 
ராஜபாளையம் வடக்கு போலீசார் செண்பகத்தோப்பு சாலையில் சமத்துவபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4 சாக்கு மூடைகளில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிவந்ததும், அதே பகுதியை சேர்ந்த முத்துவீரன் (வயது29) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், முத்து வீரனை கைது செய்தனர்.

Next Story