வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 10 Sep 2021 8:15 PM GMT (Updated: 2021-09-11T01:45:24+05:30)

போக்சோவில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர்:
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், கீழவாசல் கன்னியப்பன் தெருவை சேர்ந்தவர் வவசி. இவரது மகன் பிரதீப் (வயது 19). இவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்தார். சம்பவத்தன்று பிரதீப் 4 வயதுடைய பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த குழந்தையின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பிரதீப்பை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரதீப்பை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதீப்பிடம், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையின் நகலை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழங்கினர். குண்டர் சட்டத்தில் பிரதீப்பை கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, ஏட்டு செல்வராணி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு மணி பாராட்டினார்.

Related Tags :
Next Story