கடையநல்லூரில், நாளை 18 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


கடையநல்லூரில், நாளை 18 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 10 Sep 2021 8:17 PM GMT (Updated: 2021-09-11T01:47:10+05:30)

18 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாரிஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வரும் 12-ந் தேதி காலை 7 மணி முதல் குமந்தாபுரம் காளியம்மன் கோவில், கிருஷ்ணாபுரம் திலகர் தெரு பூங்கா சத்துணவு மையம், கிருஷ்ணாபுரம் சந்தன மாரியம்மன் கோவில், முத்துக்கிருஷ்ணாபுரம் ரத்னா நடுநிலைப்பள்ளி, உலகா மேல் நிலைப்பள்ளி, மாவடிக்கால் இந்து ஆரம்பப்பள்ளி, வானுவர் தெரு தாருஸ்ஸலாம் நடுநிலைப்பள்ளி, தினசரி மார்க்கெட் சத்துணவு மையம், இக்பால் நகர் ஹிதாயத்துல் இஸ்லாம் தொடக்கப்பள்ளி, மேலக்கடையநல்லூர் கிருஷ்ணன் கோவில், மாதாங்கோவில் சத்து ணவு மையம், தாமரைக்குளம் சத்துணவு மையம், பேட்டை தொடக்கப்பள்ளி, நகராட்சி நடுநிலைப்பள்ளி, கருப்பன் கோவில் சத்துணவு மையம், கன்னார் தெரு சத்துணவு மையம், ரகுமானியாபுரம் 7 வது தெரு அன்சாரி பள்ளிவாசல், மேலக்கடைய நல்லூர் இந்திரா நகர் புதுக்காலனி பகுதிகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா தொற்றின் 3-வது அலையில் இருந்து தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story