லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு வடமாநில தொழிலாளி சாவு


லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு வடமாநில தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 Sept 2021 1:50 AM IST (Updated: 11 Sept 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

மேலும் ஒரு வடமாநில தொழிலாளி சாவு

 நெல்லை:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் புர்சிங் (வயது 22). இவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் தங்கியிருந்து வீடுகளில் கிரானைட் கற்கள் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று புர்சிங் மற்றும் அவருடன் வேலை பார்த்த ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜீ, நரேஷ் (24), பூரா உள்ளிட்ட 8 பேர் ஒரு லோடு ஆட்டோவில் கிரானைட் கற்களை ஏற்றி கொண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி அருகே உள்ள தாமரை செல்வி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, லோடு ஆட்டோ சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் புர்சிங் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் பலத்த காயமடைந்த ராஜீ, நரேஷ், பூரா ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் நரேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
............

Next Story