வெம்பக்கோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு


வெம்பக்கோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Sept 2021 1:57 AM IST (Updated: 11 Sept 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

தாயில்பட்டி, 
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட பசுமை விடியல் திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தில் 500 மரக்கன்று நடும் பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த இ. மீனாட்சிபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிடத்தை அவர் பார்வையிட்டார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் சக்தி முருகன், ஆணையாளர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வெள்ளைச்சாமி, வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ், வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story