இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2021 2:14 AM IST (Updated: 11 Sept 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் பொன்னையா (வயது 55). இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளராக உள்ளார். இவர் நேற்று 2 அடி உயரம் உள்ள விநாயகர் சிலையை ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை மெயின் சாலையில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் வைத்து வழிபட சென்றார். அப்போது காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் விநாயகரை பற்றி பஜனை பாடல்களை பாடினர். தொடர்ந்து அவர்கள் விநாயகர் சிலையை வைக்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பொன்னையா மற்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் உள்பட 12 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து விநாயகர் சிலையை பறிமுதல் செய்து பெரிய மாரியம்மன் கோவிலில் வைத்தனர்.

Next Story