மாவட்ட செய்திகள்

கார் மோதி வாலிபர் பலி + "||" + Car collision kills walker

கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலி
கார் மோதி வாலிபர் உயிரிழந்தார்
திருச்சி
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை ராமசாமி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). இவரும், இவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஜூலியன் ராஜ் (30) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் சீனிவாசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஜூலியன் ராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று இறந்தார். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி
வேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
2. கார் மோதி வாலிபர் பலி
கார் மோதி வாலிபர் பலியானார்.
3. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்
4. கார் மோதி வாலிபர் பலி
கார் மோதி வாலிபர் ஒருவா் உயிரிழந்தாா்.