கொரோனாவுக்கு முதியவர் பலி


கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 10 Sep 2021 8:50 PM GMT (Updated: 2021-09-11T02:20:59+05:30)

கொரோனாவுக்கு முதியவர் பலியானார்

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று 45 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 74,917 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 52 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்தவகையில் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 73,251 ஆகும். தற்போதைய நிலவரப்படி 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், கொரோனாவுக்கு நேற்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 72 வயது முதியவர் உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,016 ஆக உள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் 4,814 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


Next Story