காரிமங்கலம் சஞ்சீவிராயன் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா


காரிமங்கலம் சஞ்சீவிராயன் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 11 Sept 2021 10:40 AM IST (Updated: 11 Sept 2021 10:40 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் சஞ்சீவிராயன் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

காரிமங்கலம்:
காரிமங்கலம் பகுதியில் உள்ள சஞ்சீவிராயன் பெருமாள் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் கடும் முயற்சியால் புனரமைக்கப்பட்டது. இந்த கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி கணபதி பூஜை, முதல் கால யாக பூஜை ஆகியவை நடந்தது. விழாவையொட்டி நேற்று யாகசாலையில் இருந்து புனிதநீர் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. சக்கரவர்த்தி பட்டாச்சாரியா தலைமையில் பட்டாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சாமிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் காட்டுசீகலஅள்ளி, மணிக்கட்டியூர், சின்னாண்டியூர், காவேரிகவுண்டர் கொட்டாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story