தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மோதிரம் பரிசு


தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மோதிரம் பரிசு
x
தினத்தந்தி 11 Sep 2021 6:59 AM GMT (Updated: 2021-09-11T12:29:56+05:30)

தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மோதிரம் பரிசு

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகில் உள்ள தென்முடியனூர் கிராமத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. ஆனால் முகாமில் எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்கள் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. 

இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ள கொரோனா மெகா தடுப்பூசி போடும் முகாமை வெற்றிகரமாக நடத்துவது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சம்பத் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர், முன்னாள் தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊர் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முகாம் முடிவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அதிர்ஷ்ட சாலிகளை தேர்ந்தெடுத்து முதல் பரிசாக கால் பவுன் மோதிரம், 2-வது பரிசாக எவர் சில்வர் அண்டா, 3-வது பரிசாக செப்புக்குடம், 4-வது பரிசாக செம்பு குடிநீர் பாட்டில், 5-வது பரிசாக பித்தளைத் தாம்பூலத்தட்டு, 6 மற்றும் 7, 8, 9, 10-வது பரிசாக 10 லிட்டர் பால் கேன் ஆகியவை வழங்க முடிவு செய்யப்பட்டு, பரிசு பொருட்களும் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Next Story