மாவட்ட செய்திகள்

கோஷ்டி மோதலில் 2 பேர் காயம் 4 பேர் கைது + "||" + 2 injured in clashes 4 people arrested

கோஷ்டி மோதலில் 2 பேர் காயம் 4 பேர் கைது

கோஷ்டி மோதலில் 2 பேர் காயம் 4 பேர் கைது
தேவதானப்பட்டியில் நடந்த கோஷ்டி மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதீப் குமார்(வயது 23). இவர் அந்த பகுதியில் பொம்மை கடை வைத்துள்ளார். இவருக்கும் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த லியோ டால்ஸ்டாய் (30) என்பவருக்கும் கடந்த வருடம் நடந்த திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டது. 
இந்நிலையில் நேற்று முன்தினம் லியோ டால்ஸ்டாய், அவரது நண்பர்கள் சூர்யா(30), சேகர்(48), செல்லம் (32) ஆகியோருடன் காமாட்சி அம்மன் கோவில் அருகே நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவர்கள் பொம்மை கடையில் பொருட்கள் வாங்கும்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. 
இதையடுத்து இருதரப்பினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இதில் சூர்யா, பிரதீப்குமாரின் உறவினர் சோபன் (20) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்குமார், லியோ டால்ஸ்டாய், சேகர், செல்லம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.