மாவட்ட செய்திகள்

செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை + "||" + Because parents condemned cell phone viewing Teen suicide

செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகில் உள்ள குள்ளபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சுவாதி (வயது 18). பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவர் அடிக்கடி செல்போன் மற்றும் மடிக்கணினி பார்த்துக்கொண்டு வீட்டு வேலைகள் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதில் மனம் உடைந்த சுவாதி நேற்று முன்தினம் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுவாதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.