மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவைகள் இயக்கம் + "||" + Electric train services run as scheduled on Sunday in honor of Ganesha Chaturthi

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவைகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவைகள் இயக்கம்
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று (10-ந்தேதி) கொண்டாடப்படுவதால் தேசிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய விடுமுறையான இன்று மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.