சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளுக்கு செல்ல புதிய பாதை திறப்பு
சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளுக்கு செல்ல புதிய பாதை திறந்து விடப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகளுக்காகவும், பயணிகளின் வசதிக்காவும் விரிவாக்க பணிகள் செய்யப்பட்டு வருகிறது. விமான சேவைகள் விரைவாக இருக்க ஓடுபாதைகள் அருகே விமான நடைமேடைகள் அமைக்கப்பட்டன. இந்த நடைமேடைகளில் இருந்து ஓடுபாதைக்கு விமானங்கள் விரைவாக செல்லக்கூடிய வகையில் புதிதாக பாதை அமைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளுக்கு நடுவே 1970 மீட்டர் நீளத்திலும், 25 மீட்டர் அகலத்திலும் இந்த பாதை அமைக்கப்பட்டது.
இந்த பாதை மூலமாக விமானங்கள் விரைவாக நடைமேடைக்கும், ஓடுபாதைக்கும் வந்து செல்ல முடியும். இதனால் ஓடுபாதைக்கு செல்லக் கூடிய விமான போக்குவரத்து நேரம் குறையும். புதிதாக அமைக்கப்பட்ட பாதை நேற்று விமான போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. இந்த பாதையில் முதல் முறையாக வந்த விமானத்துக்கு இருபக்கமும் நின்று தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.
Related Tags :
Next Story