மாவட்ட செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் மனைவி உருவப்படத்துக்கு மத்திய இணை மந்திரி முருகன் அஞ்சலி + "||" + For the portrait of O Panneerselvam wife Tribute to Union Minister Murugan

ஓ.பன்னீர்செல்வம் மனைவி உருவப்படத்துக்கு மத்திய இணை மந்திரி முருகன் அஞ்சலி

ஓ.பன்னீர்செல்வம் மனைவி உருவப்படத்துக்கு மத்திய இணை மந்திரி முருகன் அஞ்சலி
ஓ.பன்னீர்செல்வம் மனைவி உருவப்படத்துக்கு மத்திய இணை மந்திரி முருகன் அஞ்சலி செலுத்தினார்.
பெரியகுளம்:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 1-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று நேரில் சென்றார். பின்னர் அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயலட்சுமியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., வி.ப.ஜெயபிரதீப் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். 
பின்னர் நிருபர்களிடம் முருகன் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவு மிகப்பெரிய பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றார். 
அப்போது தேனி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டி மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.