மாவட்ட செய்திகள்

கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,508 வழக்குகளுக்கு தீர்வு + "||" + Held in the courts Settle on 1508 cases in National Peoples Court

கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,508 வழக்குகளுக்கு தீர்வு

கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,508 வழக்குகளுக்கு தீர்வு
கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,508 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட செசன்சு நீதிபதி விஜயா தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி முகமது ஜியாவுதீன், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு சுந்தரம், மாவட்ட உரிமையியல் நீதிபதி சித்ரா, ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். 
பெரியகுளம் சப்-கோர்ட்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி திலகம், ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ரூபணா ஆகியோர் முன்னிலையிலும், உத்தமபாளையம் கோர்ட்டில் சார்பு நீதிபதி கன்னியாதேவி, மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவணசெந்தில் ஆகியோர் முன்னிலையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. ஆண்டிப்பட்டி கோர்ட்டில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ், கூடுதல் மகிளா நீதிபதி ரமேஷ் ஆகியோர் முன்னிலையிலும், போடி கோர்ட்டில் மாவட்ட உரிமையியல் நீதிபதி உம்முல் பரிதா, ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு வேலுமயில் ஆகியோர் முன்னிலையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வராக்கடன்கள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், மொத்தம் 1,508 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் நிலுவை வழக்குகளில் ரூ.3 கோடியே 71 லட்சத்து 36 ஆயிரத்து 154 மதிப்பில் தீர்வு பெற்று கொடுக்கப்பட்டது.