வாணியம்பாடியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 83 வழக்குகளில் தீர்வு


வாணியம்பாடியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 83 வழக்குகளில் தீர்வு
x
தினத்தந்தி 11 Sept 2021 7:19 PM IST (Updated: 11 Sept 2021 7:19 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதிமன்றத்தில் 83 வழக்குகளில் தீர்வு

வாணியம்பாடி

வாணியம்பாடி நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம்  நடைபெற்றது. சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி காளிமுத்துவேல், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாலதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில்  வாணியம்பாடி பார் அசோசியேஷன் மற்றும் வாணியம்பாடி தாலுகா லாயர் அசோசியேஷன் சார்பில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சார்பு நீதிமன்றத்தில் 42 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடியே 29 லட்சத்து 70 ஆயிரத்து 555-ம், குற்றவியல் நீதிமன்றத்தில் 25 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 900, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 16 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது. 
மேலும் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், இழப்பீடு தொகையாக ரூ.25 லட்சத்திற்கான ஆணையை வழங்கினார். 

Next Story