ஆரணியில் அசைவம் சாப்பிட்ட சிறுமி பலி ஓட்டல் உரிமையாளர், சமையல் மாஸ்டர் கைது
ஆரணி அசைவ ஓட்டலில் சாப்பிட்ட சிறுமி பலியானார். இந்த நிலையில் மேலும் 15 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர், சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி
ஆரணி அசைவ ஓட்டலில் சாப்பிட்ட சிறுமி பலியானாள். இந்த நிலையில் மேலும் 15 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர், சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டனர்.
அசைவ ஓட்டல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி ரோட்டில் மணிக்கூண்டு அருகே நகராட்சி பெரியார் மாளிகை வளாகத்தில் 7 ஸ்டார் என்ற அசைவ ஓட்டல் உள்ளது. இதனை காதர்பாய் என்பவரின் மகன் அம்ஜத் பாஷா நடத்தி வருகிறார். கடந்த 8-ந் தேதி இவரது அசைவ ஓட்டலில் உணவு சாப்பிட்டவர்கள் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது.
அவ்வாறு பாதிப்பு ஏற்பட்ட 25 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஆரணி சேத்துப்பட்டு ரோடு லட்சுமி நகர் பகுதிைய சேர்ந்த ஆனந்த் என்பவர் மகள் லோஷினி(வயது 10) சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த நிலையில் நேற்று ஆரணி பெருமாள் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி வினோதினி, அவரது மகன்தேவன் (வயது 2), எஸ்.வி. நகரம் பகுதியை சேர்ந்த பாரதிராஜா (41) அவரது மகன் நிதீஷ்குமார், மகள் ஹரிணி, மேலும் வித்தியா, மகேந்திரன், சுமதி, உள்பட 15 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே இறந்த ேலாஷினியி்ன் அண்ணன் சரணுக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சரண் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டான்.
ஓட்டல் உரிமையாளர், சமையல் மாஸ்டர் கைது
இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 6 பேர் கொண்ட குழு உடனடியாக நேற்று முன்தினமே அந்த ஓட்டலில் இருந்த உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா உத்தரவின்பேரில் ஆரணி தாசில்தார் சுபாஷ் சந்தர், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜன் ஆகியோர் அசைவ ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டலின் உரிமையாளர் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகிய இருவரை போலீசார் கைது செய்து வந்தவாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர். சம்பந்தப்பட்ட 7 ஸ்டார் ஓட்டலின் உரிமம் தற்காலிகமாக ரத்து ெசய்யப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story