மாவட்ட செய்திகள்

அணைக்கட்டு அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு ‘குவா குவா’ + "||" + ‘Gua gua’ for woman in ambulance

அணைக்கட்டு அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு ‘குவா குவா’

அணைக்கட்டு அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு ‘குவா குவா’
ஆம்புலன்சில் பெண்ணுக்கு ‘குவா குவா’
அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஏரிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்ராஜ். இவருடைய மனைவி சங்கீதா (வயது25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டுனர் பிரேம்குமார், மருத்துவ உதவியாளர் சரஸ்வதி ஆகியோர், அவரை பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அணைக்கட்டு அருகே சென்றபோது சரஸ்வதிக்கு வலி அதிகமானதால் மருத்துவ உதவியாளர் சரஸ்வதி பிரசவம் பார்த்தார். அப்போது சங்கீதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், குழந்தையும் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.