வேலூரில் சுகாதாரம் இன்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்


வேலூரில் சுகாதாரம் இன்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 11 Sep 2021 3:41 PM GMT (Updated: 2021-09-11T21:11:06+05:30)

சுகாதாரம் இன்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்

வேலூர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பஸ்நிலையம் அருகே உள்ள அசைவ ஓட்டலில் தந்தூரி உணவு வகைகள் சாப்பிட்ட சிறுமி லோஷினி (வயது 10) உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதையடுத்து அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒட்டல்களிலும் சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறதா?, கெட்டுப்போன மீன், இறைச்சி சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார்.  

அதன்பேரில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று வேலூர் சத்துவாச்சாரி, கிரீன்சர்க்கிள் பகுதியில் உள்ள 13 ஓட்டல்களில் கெட்டுப்போன மீன், இறைச்சிகள், காய்கறிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தப்படுகிறதா என்றும், வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான உணவுகள் விற்பனை செய்யப்படுகிறா என்றும் சோதனை செய்தனர். அப்போது சுகாதாரம் இன்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் கெட்டுப்போன 2 கிலோ சிக்கன், 6 கிலோ மீன், 7 கிலோ காய்கறிகள், 7 கிலோ உணவு பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story