ஊட்டி விபத்தில் 2 பேர் படுகாயம்


ஊட்டி விபத்தில் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Sep 2021 4:09 PM GMT (Updated: 2021-09-11T21:49:57+05:30)

ஊட்டியில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஊட்டி,

ஊட்டியில் லோயர் பஜாரில் இருந்து பிங்கர்போஸ்ட் நோக்கி ஒரு தனியார் மினி பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு வாகனம் மீது மினி பஸ் திடீரென மோதியது. தொடர்ந்து சரக்கு வாகனம் முன்னால் நின்ற இருசக்கர வாகனம் மீது மோதி, சாலையில் நடந்து சென்ற 2 பேர் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்து அவர்கள் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் மினி பஸ் கண்ணாடி உடைந்து சாலையில் கிடந்தது. இதனை போலீசார் சுத்தம் செய்தனர். தொடர்ந்து அஜாக்கிரதையாக ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதாக மினி பஸ் டிரைவர் கார்த்திக்(வயது 35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story