மாவட்ட செய்திகள்

குடிமங்கலம் பகுதியில் குளங்களுக்கு தண்ணீர் விடப்படுமா?என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். + "||" + kudimangalam kulam

குடிமங்கலம் பகுதியில் குளங்களுக்கு தண்ணீர் விடப்படுமா?என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

குடிமங்கலம் பகுதியில் குளங்களுக்கு தண்ணீர் விடப்படுமா?என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
குடிமங்கலம் பகுதியில் குளங்களுக்கு தண்ணீர் விடப்படுமா?என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
குடிமங்கலம், 
குடிமங்கலம் பகுதியில் குளங்களுக்கு தண்ணீர் விடப்படுமா?என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
குளம் குட்டைகள்
குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் 80-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள், மற்றும் தடுப்பணைகள் உள்ளன. குடிமங்கலம் பகுதிகளில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் குளம், குட்டைகள் நிரம்பவில்லை. 
நிலத்தடி நீர்மட்டமும் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. மானாவாரி சாகுபடியில் கொத்தமல்லி மக்காச்சோள சாகுபடி செய்யப்படுகிறது. கிணற்றுப்பாசனம் மூலம் தக்காளி, கத்தரி, மிளகாய் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பருவமழை கை கொடுக்காததால் காய்கறி சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. 
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பி.ஏ.பி. தண்ணீர்
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி.பாசனம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. பாசனத்திற்காக பி.ஏ.பி. வாய்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் குடிமங்கலம் பகுதியில் மானாவாரி சாகுபடியில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப் படுகிறது.
குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுவருகிறது. திருமூர்த்திகூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை. ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் எதிர்பார்த்த அளவு தண்ணீர் இல்லை. ஊராட்சிகள் சில ஆள்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரை மின்மோட்டார் அமைத்து குடியிருப்புகளுக்கு வழங்கி வருகிறது. பி.ஏ.பி. வாய்க்காலில் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் திறந்து விடப்படும் பி.ஏ.பி. தண்ணீரை அருகிலுள்ள குளம்,குட்டைகளுக்கு நிரப்ப வேண்டும என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதனால் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் ஊராட்சிகளில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.