காங்கேயம் பகுதியில் இன்று 4 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.


காங்கேயம் பகுதியில் இன்று 4 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
x
தினத்தந்தி 11 Sept 2021 9:46 PM IST (Updated: 11 Sept 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் பகுதியில் இன்று 4 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

காங்கேயம், 
காங்கேயம் பகுதியில் இன்று 4 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
4,100 பேருக்கு தடுப்பூசி 
திருப்பூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 631 மையங்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு காங்கேயம் ஒன்றியம் மற்றும் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 25 மையங்கள் மற்றும் 3 நடமாடும் மையங்கள் மூலம் மொத்தம் 4,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
அதன்படி காங்கேயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கல்லேரி, மறவபாளையம், படியூர், சிவன்மலை ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளிலும், சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், சிவன்மலை மினி கிளினிக் மற்றும் வாகனங்கள் மூலம் 2 நடமாடும் மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நத்தக்காடையூர், மருதுறை, பரஞ்சேர்வழி, பழையகோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையங்கள், நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம், பழையகோட்டை மினிகிளினிக் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
நத்தக்காடையூர்
பச்சாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பாப்பினி, வீரணம்பாளையம், பொத்தியபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளிலும், பச்சாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஒரு நடமாடும் வாகனம் மூலமும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
காங்கேயம், சத்யா நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட புலிக்கல்மேடு, புலிமாநகர், களிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளி மையங்கள் மற்றும் சத்யாநகர் ஆரம்ப சுகாதார நிலையம், காங்கேயம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story