திருவண்ணாமலையில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு ஓட்டம்
இளைஞர்களுக்கான விழிப்புணர்வு ஓட்டம்
திருவண்ணாமலை
இந்தியாவின் 75-வது சுதந்திர தின நினைவு கொண்டாட்டத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் ‘உடல் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம்’ என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு ஓட்டம் நேற்று காலை நடந்தது. திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசானிய மைதானம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை இளைஞர்கள் விழிப்புணர்வு ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஈசானிய மைதானத்தில் ஆரோக்கிய இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கிருபாநிதி விழிப்புணர்வு ஓட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ஓட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது. நிறைவு நிகழ்ச்சியில் மத்திய அரசு வக்கீல் சங்கர் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மண்டல முதுநிலை மேலாளர் பெரியகருப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி, நேரு யுவகேந்திரா அலுவலர் கண்ணகி, விவேகானந்தர் அரிமா சங்க தலைவர் ஜெயபிரகாஷ், யோகா ஆசிரியர்கள் சுரேஷ்குமார், கல்பனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story