அவினாசி அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடப்பட்டது.

அவினாசி அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடப்பட்டது.
x
தினத்தந்தி 11 Sep 2021 4:23 PM GMT (Updated: 11 Sep 2021 4:23 PM GMT)

அவினாசி அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடப்பட்டது.

அவினாசி
அவினாசி அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடப்பட்டது.
3 டாக்டர்கள்
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா அலுவலகம் அருகில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சித்த மருத்துவ பிரிவும் உள்ளது. அவினாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் இங்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இந்த நிலையில் இங்கு பணியாற்றும் டாக்டர்கள் 2  பேர் மற்றும் சித்த மருத்துவர் ஒருவர், சமையலர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
3 நாட்கள் மூடப்படும்
எனவே அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டார்கள்.
மேலும் மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் 3 நாட்களுக்கு அரசு மருத்துவமனை மூடப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story