ெவம்பாக்கம் அருகே தாலியை கழற்றி வைத்துவிட்டு இளம்பெண் மாயம்
தாலியை கழற்றி வைத்துவிட்டு இளம்பெண் மாயம்
தூசி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சதீஷ் (வயது 26). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (24). இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு பூங்கொடி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலையில் பார்த்தபோது பூங்கொடியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ், மனைவியை தேடினார். அப்போது பூங்கொடி படுத்திருந்த அறையில் தாலி கழற்றி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. இதையடுத்து காஞ்சீபுரத்தில் உள்ள பூங்கொடியின் தாய் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்று பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப் பதிவு செய்து பூங்கொடியை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story