பண்ருட்டியில் முந்திரி வியாபாரி, தூக்குப்போட்டு தற்கொலை


பண்ருட்டியில் முந்திரி வியாபாரி, தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 Sep 2021 4:48 PM GMT (Updated: 2021-09-11T22:18:50+05:30)

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீதமுடிவு

கடலூர், 
பண்ருட்டி லிங்க் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் முத்துக்குமாரசாமி மகன் நரேந்திரன் (வயது 33). முந்திரி வியாபாரம் செய்து வந்த இவருக்கு கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட நரேந்திரன் நேற்று காலை பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் உள்ள ஒரு வணிக வளாக கட்டிட அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story