மாற்றுக்கட்சியினர் 400 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்


மாற்றுக்கட்சியினர் 400 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
x
தினத்தந்தி 11 Sep 2021 4:58 PM GMT (Updated: 2021-09-11T22:28:34+05:30)

அமைச்சர் பொன்முடி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 400 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.

விழுப்புரம், 

காணை ஒன்றியத்தில் இருந்து மாற்றுக்கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோனூர், காங்கியனூர், அதனூர், தெளிமேடு, வெங்கந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து மாற்று கட்சிகளை சேர்ந்த 400 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் பொன்முடி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். புதியதாக கட்சியில் சேர்ந்த அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பொன்முடி சால்வை அணிவித்து வரவேற்றார்.இதில் எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர்கள் புஷ்பராஜ், முருகன், மைதிலி ராஜேந்திரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா, காணை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கல்பட்டு ராஜா, முருகன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story