தூத்துக்குடியில் அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு வழங்கியது போல 11 சதவீத அகவிலைப்படி உயர்வை இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் உயர்த்தி வழங்கிடவேண்டும். பழைய பென்சன் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்தவாறு மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க சிறப்புத்தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கோபிநாத், மாநில தலைவர் சிவக்குமார், மாநில பொருளாளர் சரவணன், மாநில அமைப்பு செயலாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பிரசார செயலாளர் சுமதி, மாநில தலைமை நிலைய செயலாளர் கோதண்டம் ஆகியோர் பேசினர்.
Related Tags :
Next Story