ஏரல் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு


ஏரல் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 11 Sep 2021 5:38 PM GMT (Updated: 2021-09-11T23:08:06+05:30)

விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஏரல் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.

ஏரல்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஏரல் ஒன்றியம் உமரிக்காடு, ஏரல், அகரம், சூழைவாய்க்கால், வண்டிமலைச்சியம்மன் கோவில் தெரு, பண்டாரவிளை, சிறுத்தொண்டநல்லூர் ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகர் தலைமையில், ஏரல் நகர தலைவர் சிவராமன், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, சம்படி கண்ணன் ஆகியோர் முன்னிலையில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  பின்னர் சிலைகள் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் அருகில் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் சூழைவாய்க்கால் கிளை தலைவர் இசைக்கி, ஏரல் வண்டிமலைச்சியம்மன் கோவில் கிளைத்தலைவர் ராமராஜன், அகரம் கிளைத்தலைவர் கண்ணன், அகரம் கிளைச்செயலாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story