இரும்பு கம்பிகள் திருடியவர் கைது


இரும்பு கம்பிகள் திருடியவர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2021 5:53 PM GMT (Updated: 2021-09-11T23:23:36+05:30)

தூத்துக்குடியில் இரும்பு கம்பிகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

 தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மீளவிட்டான் 4-வது ரெயில்வே கேட் அருகே சாலைகள் அமைப்பதற்காக இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று முன்தினம் 20 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் காணாமல் போனது. இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்வர் (27), சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் கார்த்திக் (33) இரும்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Next Story