பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 11 Sep 2021 6:09 PM GMT (Updated: 2021-09-11T23:39:55+05:30)

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 230 பேர் பலியாகி உள்ளனர். தற்போது கொரோனா பரவல்வெகுவாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இம்மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 308 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிற்கிணங்க, பெரம்பலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக கிராமங்கள் தோறும் என 193 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில்
27 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி செலுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 1,200 பேர், மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story