மாவட்ட செய்திகள்

யானை சவாரி திடீர் நிறுத்தம் + "||" + Elephant ride abrupt stop

யானை சவாரி திடீர் நிறுத்தம்

யானை சவாரி திடீர் நிறுத்தம்
யானை சவாரி திடீர் நிறுத்தம்
கூடலூர்

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு சுமார் 1½ ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ந் தேதி யானை சவாரி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இது தவிர முதுமலையில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து உள்ளது. 

இதனால் வளர்ப்பு யானைகளுக்கு தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரியை வனத்துறையினர் தற்காலிகமாக ரத்து செய்து உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கேட்டபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளர்ப்பு யானைகளுக்கு தொற்று பரவாமல் தடுக்க சவாரி ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றனர்.