மக்கள் நீதிமன்றத்தில் 1,202 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 1,202 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 12 Sept 2021 12:15 AM IST (Updated: 12 Sept 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதிமன்றத்தில் 1,202 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கரூர்,
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கிறிஸ்டோபர் மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 157, காசோலை வழக்குகள் 10, உரிமையியல் வழக்குகள் 45 உள்ளிட்ட குற்றவியல் சிறு வழக்குகள் 867, நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வங்கி கடன் வழக்குகள் 104 உள்ளிட்ட 1,202 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மதிப்பு ரூ.14 கோடியே 51 லட்சத்து 28 ஆயிரத்து 814 ஆகும். மேலும், 5 வருடத்திற்கு மேற்பட்ட 7 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. 
இதற்கான ஏற்பாடுகளை அமர்வு மற்றும் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான மோகன்ராம் செய்திருந்தார்.

Next Story