தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1444 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1444 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 Sep 2021 7:05 PM GMT (Updated: 11 Sep 2021 7:05 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1444 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.99 லட்சத்து 17 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1444 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.99 லட்சத்து 17 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் சமரச தீர்வு காண்பதற்கு தேசிய மக்கள் நீதிமன்றமானது நேற்று நடைபெற்றது. இதனையொட்டி திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சாந்தி தலைமை தாங்கினார்.
 கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரராஜன், சார்பு நீதிபதி வீரணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாரும், சார்பு நீதிபதியுமான சரண்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1444 வழக்குகளுக்கு தீர்வு
இதேபோல் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்ற நடந்தது. அதுசமயம் சமரசத்திற்குரிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவானம்சம் உள்பட 2,760 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
அதில் விபத்து மற்றும் குடும்ப வழக்குகள் என மொத்தம் 1444 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, ரூ.99 லட்சத்து 17 ஆயிரத்து 417 வசூல் செய்யப்பட்டது. 

Next Story