திருவிழாவிற்கு புத்தாடை வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை


திருவிழாவிற்கு புத்தாடை வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 12 Sept 2021 12:41 AM IST (Updated: 12 Sept 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி அருகே கோவில் திருவிழாவிற்கு புத்தாடை வாங்கித்தராததால் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பொன்னமராவதி:
மாணவி தற்கொலை 
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்த திருக்களம்பூர் குமாரப்பட்டியை சேர்ந்தவர் முருகன் மகள் சரசு (வயது 17). இவர், மேலைச்சிவபுரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கோவில் திருவிழாவிற்கு தன் தாய் மீனாவிடம் புத்தாடை வாங்கித் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அதற்கு தாய் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. 
இதனால் சம்பவத்தன்று கோபித்துக் கொண்ட சரசு அரளி விதையை (விஷம்) அறைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சரசு இறந்தார். இதுகுறித்து சரசுவின் அக்கா சாலினி கொடுத்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story