5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட சகோதரர்களுக்கு அமைச்சர் பாராட்டு


5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட சகோதரர்களுக்கு அமைச்சர் பாராட்டு
x
தினத்தந்தி 12 Sept 2021 1:00 AM IST (Updated: 12 Sept 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட சகோதரர்களை அமைச்சர் பாராட்டினார்.

ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள கல்லமநாயக்கர் பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகன்கள் அருண், ஸ்ரீகாந்த். அருண் கணினி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.  ஸ்ரீகாந்த் பி.டெக். படித்து முடித்து உள்ளார். இந்தநிலையில் இவர்கள் இருவரும் ஆலங்குளம் பகுதியில் உள்ள  பள்ளிகள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் ஆகியவற்றில் மரக்கன்றுகளை நட்டனர். இவர்கள் இதுவரை 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.  இவர்களுக்கு சாதனையாளர் விருதை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதையடுத்து அவர்கள், அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

Next Story