275 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


275 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 12 Sept 2021 1:20 AM IST (Updated: 12 Sept 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ஒன்றியங்களில் 275 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.

காரியாபட்டி, 
காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ஒன்றியங்களில் 275 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. 
தடுப்பூசி மையம் 
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 95 இடங்களிலும், காரியாபட்டி பேரூராட்சியில் 10 இடங்களிலும், மல்லாங்கிணறு பேரூராட்சியில் 10 இடங்களிலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 83 இடங்களிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 72 இடங்களிலும் என 275 கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த மையங்களில் இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் ஆட்டோ மூலம் தொடங்கப்பட்டது. 
ஆலோசனை கூட்டம் 
விருதுநகர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறவுள்ளது. முகாம் ெதாடர்பாக ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் பணித்தள பொறுப்பாளர்கள், சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் காரியாபட்டியூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. காரியாபட்டி தாசில்தார் தனக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் ஊராட்சிகளில் தடுப்பூசி செலுத்தும் முகாம்களை சிறப்பாக நடத்த ஆலோசனை வழங்கினர். 
தொடர்ந்து கிராமங்களில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது. இதில் தனித்துணை (முத்திரை) ஆட்சியர் விஜயகுமார் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், பஞ்சாயத்து தலைவர்கள் குரண்டி சிவசக்தி, தோணுகால் பாலமுருகன், மாங்குளம் மணிகண்டன், நாங்கூர் மலையடியான், வேப்பங்குளம் ஆதி ஈஸ்வரன், மறைக்குளம் தர்மராஜன் உள்பட பலர் விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.

Next Story