இந்து முன்னணியினர் 11 பேர் கைது
சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
தமிழக அரசு கொரோனா பரவலை காரணம் காட்டி விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு செய்ய தடை விதித்தது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசி பஸ் நிலையம் முன்பு இந்து முன்னணி அமைப்பின் விருதுநகர் மாவட்ட பொதுசெயலாளர் சுரேஷ் தலைமையில் 10 பேர் தமிழக அரசை கண்டித்தும், இந்து முன்னணி மாநில தலைவர் பொன்னையாவை விடுதலை செய்ய கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். சாத்தூரில் இந்து முன்னணி நகர செயலாளர் வனராஜ் தலைமையில் 8 பேர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். சாத்தூர் டவுன் காவல் நிலைய தலைமை காவலர் வெள்ளத்துரையின் புகாரின் பேரில் போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story