மராட்டிய அரசு இந்துகளுக்கு எதிரானது நாராயண் ரானே
மராட்டிய அரசு இந்துகளுக்கு எதிரானது என மத்திய மந்திரி நாராயண் ரானே குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை,
மராட்டிய அரசு இந்துகளுக்கு எதிரானது என மத்திய மந்திரி நாராயண் ரானே குற்றம்சாட்டி உள்ளார்.
இந்துகளுக்கு எதிரானது
மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்தநிலையில் வரும் 19-ந் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து கடந்த வியாழன் இரவு மும்பை போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது மக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய மந்திரி நாராயண் ரானே மராட்டிய அரசு இந்துகளுக்கு எதிரானது என குற்றம்சாட்டி உள்ளார்.
இந்துத்வா முடிந்துவிட்டது
இதுகுறித்து அவர் கூறுகையில், "பண்டிகை காலத்தில் மராட்டிய அரசு கட்டுப்பாடுகளை விதித்து இருப்பது தவறாகும். இது இந்துகளுக்கு எதிரான அரசு. இந்துகளின் பண்டிகை வரும் போது தான் அவர்கள் கட்டுப்பாடுகளை பற்றி எல்லாம் யோசிக்கிறார்கள். இந்துகளை தவிர மற்ற எந்த மத பண்டிகையின் போதும் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
சிவசேனா இந்துத்வா பற்றி பேசுகிறது. ஆனால் பா.ஜனதாவுடனான கூட்டணி முறிந்த போது அவர்களின் இந்துத்வா முடிந்துவிட்டது" என்றார்.
Related Tags :
Next Story