பெங்களூருவில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம்


பெங்களூருவில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 11 Sep 2021 9:44 PM GMT (Updated: 2021-09-12T03:14:41+05:30)

பெங்களூருவில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

பெங்களூரு: பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூரு டி.ஜே.ஹள்ளியில் பூமிக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் எதிரொலியாக 12-ந் தேதி (இன்று), 13-ந் தேதி (நாளை) காந்திநகர், குமார பார்க் கிழக்கு, வசந்த்நகர், ஐகிரவுண்ட், சம்பங்கிராம்நகர், சி.கே.சி.கார்டன், கே.எஸ்.கார்டன், டவுன் ஹால், லால்பாக் ரோடு, இன்பேன்டரி ரோடு. சிவாஜிநகர், காக்ஸ் டவுன், தொட்டிகுந்தா, ஜீவனஹள்ளி, விவேகானந்தா நகர், ஹட்சின் ரோடு, டி.ஜே.ஹள்ளி, பில்லண்ணா கார்டன், கே.ஜி.ஹள்ளி, நாகவாரா, சமதாநகர், . பில்லண்ணா கார்டன் 1, 2, 3-வது ஸ்டேஜ்கள், ஸ்ரீநகர், பனசங்கரி 1-வது ஸ்டேஜ், யஷ்வந்தபுரம், மல்லேசுவரம், எல்.பி.சாஸ்திரி நகர், எல்.ஐ.சி. காலனி, எச்.ஏ.எல். 3-வது ஸ்டேஜ், ஜீவன்பீமாநகர், கோடிஹள்ளி, அனுமந்தப்பா லே-அவுட், பஜார் தெரு, அல்சூர், எம்.வி.கார்டன், மர்பி டவுன், ஜோகுபாளையா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story