பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து குந்தாப்புராவுக்கு அதிவிரைவு பஸ் மீண்டும் இயக்கம்


பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து குந்தாப்புராவுக்கு அதிவிரைவு பஸ் மீண்டும் இயக்கம்
x
தினத்தந்தி 11 Sep 2021 9:45 PM GMT (Updated: 2021-09-12T03:15:23+05:30)

பெங்களூருவில் இருந்து குந்தாப்புராவுக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவுக்கு அதிவிரைவு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்த பஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

தற்போது விமான போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதால், பெங்களூரு விமான நிலையம்-குந்தாப்புரா இடையே அதிவிரைவு பஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் பஸ் இரவு 7 மணிக்கு குந்தாப்புராவை சென்றடையும். மேற்கண்ட தகவலை கே.எஸ்.ஆர்.டி.சி. கூறியுள்ளது.

Next Story