மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டி மீது கார் மோதல்; 7 பேர் கவலைக்கிடம் + "||" + accident 7 severely injured

மாட்டு வண்டி மீது கார் மோதல்; 7 பேர் கவலைக்கிடம்

மாட்டு வண்டி மீது கார் மோதல்; 7 பேர் கவலைக்கிடம்
ஒன்னாளி அருகே மாட்டு வண்டி மீது கார் மோதிய விபத்தில் 16 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சிக்கமகளூரு: ஒன்னாளி அருகே மாட்டு வண்டி மீது கார் மோதிய விபத்தில் 16 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

16 பேர் படுகாயம்

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 13 பேர் ஒரு காரில் தாவணகெரே நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா சொரடூர் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த மாட்டு வண்டி மீது கார் பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்தில், காரில் வந்த 13 பேரும், மாட்டு வண்டியில் வந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர், மேலும் மாட்டு வண்டியில் வந்த ஒரு ஆட்டுக்குட்டி சம்பவ இடத்திேலயே செத்தது. மற்றொரு ஆட்டுக்குட்டி பலத்த காயமடைந்தது. 

7 பேர் கவலைக்கிடம்

இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் படுகாயமடைந்த 16 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தாவணகெரே, ஒன்னாளி அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஒன்னாளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.